Wednesday, April 18, 2012

இந்த நோயை மட்டும் எவரும் ஏற்பதே இல்லை ;
தனக்கு இல்லாத நோயைப் பிறரிடம் கதைத்து
அனுதாபம் பெறத் துடிப்போர் கூட
மன நோயினை மட்டும் அறவே மறுப்பர்-
' உனக்குத்தான் மனநோய் , மருந்தை நீயே சாப்பிடு '
இது படித்தவர் படிக்காதோர் வேறுபாடின்றி
சிக்கித் தவிப்பவர்தம் தவறாத கூற்று;
இவர்களின் நிலைமை பரிதாபம் எனிலோ
நமது நடத்தையோ  அவர்க்கு புரியாத புதிர் !
ஒரு சின்னக் குழந்தையும் மோப்பம் பிடித்திடும்
தன் பார்வையாலேயே அளவும் எடுத்திடும் ;
சமூகத்தின் நாக்கு நாராசமாய்ச் சுழலும்
தன் பெயரையே கூட அவ்வில்லம் இழக்கும் ;
பெற்றோர் தினமும் நலிந்து சாவார்
எதிர் காலம் எண்ணித்  தவியாய்த் தவிப்பர் ;
வளர்ந்தும் குழந்தையாய்ச்  செய்வது அறியாது
ஏளன இலக்காய் வாழும் இவர்களை
பண்புடன் போற்றும் மையங்கள் வாழ்கவே !
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment