Wednesday, April 11, 2012

வசந்தத் துள்ளல்
&
வசந்தத்தின் துள்ளலாய் தென்காற்றின் நர்த்தனம்
மாலைப்பொழுதின் மயக்கும் மேடையில் --
காதுள் நிறைத்து கன்னத்தில் தடவி
அவசர கதியில் ' பர பர'க் காற்று -
செல்லும் வழியில் சொல்லும் சேதியில்
மரங்களின் வாய்களில் குதித்தெழும் சிரிப்பு-
உடல் குலுங்கக் குலுங்க மரமே சிரிப்பாய் !
வசந்தம் வந்திட என் கழுத்தே வலிக்கும்
மரத்துள் புதைந்து கூவும் குயிலைத் தேடி-
கண்ணைச் சிறுக்கி இலைதழை செருகி
சிறு அசைவு தேடலில் மௌனம் காத்து
அலுத்துத் திரும்பிட அந்நொடி கத்தும்
'குஹூக் குஹூக் ' என குபுக் குபுக் குமிழாய்-
சித்திரை வருகுது திருவிழா துவங்குது
மாலைக் காற்றுள் மக்களை அழைக்குது
காலை கடுமைக்கு மாலை மருந்தாய் !
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment