Monday, January 23, 2012


வெண்தாடி என்பது கனிவின் களமா ?
அச்சுறுத்தும் அடையாளச் சின்னமா ?
என் மகளின் மகன் அவன்--
ஒன்றைத் தாண்டிய அழகிய குழந்தை
"கண்ணா !வாய்யா !"-- மிக ஆசையாய் அழைக்க
... அப்பிஞ்சு முகத்தில்தான் எத்தனை எத்தனை
பயத்தின் முட்கள் ! பீதியின் வெள்ளம் !
மகளை நோக்கி அழுகையில் ஓட்டம் !
மறைந்து ஒளிந்து சட்டெனத் தலை காட்டி
"ஹா!ஹூ!" என்று சப்தங்கள் செய்து
தின்பண்டம் சில கையிலே திணித்து
ஒவ்வொரு முள்ளாய் வலியாது அகற்றி
கன்னம் இரண்டில் புலர் வான் பெருக்கி
விழிகள் இரண்டில் நம்பிக்கை மலர்த்து
கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அணுகி
அவன் பூப் பாதம் பற்றிக் கண்களில் ஒற்றினேன் -
கவனமாய்த்தான் கரம்தனைக் கேட்டேன் ;
மெத்துக் கரங்களில் முள் முத்தம் பட்டிட
விடுக்கெனச் சுண்டி தன்கை மறைத்தனன் !

----சந்திர கலாதர்

No comments:

Post a Comment