நேயத்தால் பேரண்டம் ஆனவன்
&
சற்றுக் காலம் தாழ்ந்து விடுகிறது இன்று -
வானம் எனக்காகக் காத்திருக்கிறது ;
புதிய மேக அணிவகுப்புகளுடன் --
காற்று நின்று போயிருக்கிறது ;
வந்ததும் புன்னகை முத்தம் பொழிகிறது -
பறவைகள் மௌனம் காத்திருக்கின்றன ;
கண்டதும் களிப்பில் கீத அலைகளாகின்றன---
எனக்காக மரங்கள் சிலைத்துக் காண்கிறேன் ;
பார்த்ததும் பச்சைப் பற்கள் பளீரிடுகின்றன --
சூரியன் ஆரஞ்சு சோகம் போர்த்திருக்கிறான் ;
பார்த்ததும் பளீர் கரங்கள் பரப்பித் தொடுகிறான் --
அண்டங்களின் அணுவின் அற்பக்கூறும் இல்லாதவன் ;
ஆனால் நேயத்தால் நான் பேரண்டம் ஆனவன் !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment