குழந்தாய் !
இப்படி அழைக்கையிலேயே
அச்சொல்லில் இழை குழைவு --
உன் மெத்துமெத்து மேனிபோலே !
உன் துறுதுறுப் பார்வைக்குள்
கேள்விகள் செருகி வைத்தாய் ;
உன் வாய் உதிர் வார்த்தைகள்
திணறடிக்கும் கேள்விகள் !
இப்படி ஓர் முட்டாளுக்கா
இத்தனை பட்டங்கள் ?
அடிப்படை அறிவையே நீ
அசைத்துப் பார்க்கிறாய் !
"முடியலைடா சாமீ !"-
மனதுள் வியர்க்கிறேன் ;
எத்தனை தெரியாத கேள்விகள் ?
பொய்யான மூட பதில்கள் !
சூரியன் உதிக்கிறான் ;
ஒன்று புரிந்தது -
கதிரவன் கிரணங்கள்
உன் கேள்விகளில் குறைவு !
என்னுள் பார்க்கிறேன் -
என் பொறுமையின் அந்தியை !
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment