Thursday, March 22, 2012

இயற்கைப் படைப்பினை ஆழ்ந்து இன்புறல் போதாதோ?
பெயர்கள் தெரிவது அத்தனை அவசியமா?
என் அனுபவங்களைப் பெயரின்றி எப்படிப் பகிர்ந்திடுவேன்?
பெயர்கள் இன்றி நெஞ்சில் வடிவில்லை தெளிவில்லை -
ஆலமரம் எனக் கூறுகையில் அனைத்தும் அழகாய்ப் பதிகிறது
ஆயிரம் விளக்கம் தந்தாலும் அவ்வொரு வார்த்தைக்கு ஈடாமோ?
மரமே மலரே பறவாய் என்பதிலும் பெயர் சொல்லி அழைத்தல் ஈர்க்குமன்றோ?
தெருவில் போகும் தெரிந்தவனை ' ஏய் ' என்று அழைப்பின் திரும்புவனோ?
பெயர் என்பது நெஞ்சை நெருங்குவது ;தொலைவின் கழுத்தை நெருக்குவது !
பெயர் என்பதுவே பலரது அனுபவச் சாலைச் சந்திப்பு என்பேன்
பெயர் இன்றிப் போனால் சுகம் இல்லை;தேற்றமும் இல்லை !
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment