Thursday, March 29, 2012

திகட்டாதது எது ?
எதுவுமே இல்லையா ?
எதுவாவது இருக்கிறதா ?
மிதமிஞ்சிப்போயின்
கவிதையும் கசக்கிறது
காதலுமே கைக்கிறது
இதயம் சோர்கிறது
மனம் வியர்க்கிறது
விரக்தி வாட்டுகிறது
'ஓடு, ஓடிபோய்விடு!'
என்ற ஓலம் கேட்கிறது
ஒரே மருந்தாய்
மொட்டை மாடியில்
வான்நோக்கி வீழ்கிறேன்
நீலத்தை குடிக்கிறேன்
சிறுகாற்று ஒன்று
நிம்மதி போர்த்துகிறது .
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment