Wednesday, January 18, 2012

gitanjali-7
&
my song has put off her adornments.
she has no pride of dress and decoration.
ornaments would mar our union;
they would come between thee and me;
their jingling would drown thy whispers.
my poet's vanity dies in shame before thy sight.
o master poet, i have sat down at thy feet .
only let me make my life simple and straight,
like a flute of a reed for thee to fill with music.
--rabindranath tagore 
&
எனது கீதங்கள் அணிகலன்கள் அகற்றி விட்டன-
அலங்காரம்..மிளிர் ஆடை கர்வங்களும் அவளுக்கு இல்லை -
நம் இணைதலை நகைகள் தடை செய்யும்-
உனக்கும் எனக்கும் இடையில் புகுந்துகொள்ளும் -
அவற்றின் கிணுகிணுப்பு  நம் பூமொழிகளை மூழ்கடிக்கும் !
உன் பார்வையில் எனது 'கவிஞன் மமதை 'வெட்கி மாள்கிறது -
ஓ! தலைமைக் கவிஞனே !
உன் பாதங்களில் அமர்ந்திருக்கிறேன் -
நீ இசையால் நிரப்புவதற்காக
ஒரு வேய்ங்குழல்போல் என் வாழ்வை 
எளிமையாய் நேராய்  நான் செம்மை செய்வேனாகுக !
 &
----தமிழ் ஆக்கம் 
சந்திர  கலாதர்        

No comments:

Post a Comment