Sunday, January 1, 2012

2011-ன் விடைபெறல் நொடிகள்

2011-ன் விடைபெறல் நொடிகள்
&
31.01.2011..சனிக்கிழமை
மார்கழி -15.
என் வான அழகைக் காண வருடத்தின் அந்திம வேளையில் திறந்த மாடி செல்கிறேன் -
விடைபெற , விடை கொடுத்திட ஒரு துடிப்பாய் வானில் விழிக்குதிரைகளின் குளம்பு இசைக்கிறேன் ;
என் மனமும் வானமும் ஏன் ஒரே மௌனமாய் ?
இன்று எனக்கு அருள் இல்லையோ ?
அழகு வரிகளின் அன்பு சொல்லாட்டுக்கள் கிடையாதோ ?
மாடிச் சதுரத்துள் வட்டங்கள் எத்தனை வரைவது என் பாதங்கள் ?
எதுவும் ஏன் இன்று பேச மறுத்து ..நெஞ்சைக் கனமாக்குகின்றன?
சோர்ந்து தவிக்கையில்..." மகனே ! வெறும் கையினனாய் என்று சென்றிருக்கிறாய் ,சொல் ?
வான் நடையில் இந்தக் கோடித் திட்டு மேகங்களின் வியூகம் நீ காண்கிலையோ ?
இன்று கவிதை வரிகளின் வர்ஷங்கள் இல்லை ..ஆனால் மேகத்தின் அணிவகுப்பை எழுது ! "--
என வான் குரல் மென்மையாய் எனை அழைத்தது ,
சடசட எனத் தரை இறங்கி படப் பெட்டி ஏந்தி ஆசை ஆசையாய் அதன் மடி இறக்கினேன் .
இயற்கை என்றும் எனை ஏமாற்றாது !
அந்தி வேளையில் என் சூரிய நாயகனை மேலைச் சரிவில் ஆண்டின் இறுதி மாலை நொடிகளில்
காணாத சோகம் மட்டும் என்னை அகலாது !
' தானே ' புயல் என் ஆதவனை இன்று விழுங்கி விட்டது , என் செய்வேன் .
--சந்திர கலாதர்
--
  1.  

No comments:

Post a Comment