Thursday, January 26, 2012

அந்தியில் நேற்று ஓடிய சூரியன்
பொழுதெல்லாம் எங்கோ மறைவில்
செம்புழுதியில்  புரண்டு விளையாடி 
காலையில் கமுக்கமாய் கிழக்காய் நுழைந்திட 
அன்னை இயற்கை அழுத்தி பிடித்து
மேகத் தொட்டியில் அமுக்கிக் குளிப்பாட்டி 
செவ்வழுக்கு நீக்கி பொன்மேனி மீட்டனள் -
'தகத்தக' என வான் ஏறிச் சிரித்தனன்!    
 
 
--சந்திர கலாதர்       

No comments:

Post a Comment