வாழ்க நீ மகளே !
&
அவள் என் மகள்-
ப்ரிய ரூபமானவள்
என் விழிகளில் அழகானவள்
அன்பானவள் சொல் துடிப்பானவள்
செயலில் அணில் ஆனவள்
துன்பப் புயல் பார்த்தவள்
எனைக் கரை சேர்த்தவள்
என் விழி நீரானவள்
என் புவி மையம் ஆனவள்
மௌனங்களில் நான் பேசுவேன்
அவள் குரல் ஏங்கித் தடுமாறுவேன்
அவள் விரல்களில்
சிலை விளையாடிடும்
என்னுள் கவிதை ஆனவள்
என் கவிதை படிக்காதவள்
அழகு மகன் ஈன்றவள்
அன்பு இல்லம் சேர்ந்தவள்
குடியரசு நாள் பிறந்தவள்
என் நெஞ்சில் குடிகொண்டவள்
வாழ்க நீ தாயே வளமாகவே !
நெஞ்சார வாழ்த்துவேன் தந்தை நானே !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment