28/01/2012./சனி
பிற்பகல் 4 மணி
திறந்த மாடியில் குளிர் காற்றிடை இதமான வெயிலில்
வான் பார்த்துப் படுத்து மேக சஞ்சாரங்கள் ரசிக்கிறேன் ...
நீலவான்கடலில் காற்று கடைந்தெடுக்கும் வெண் நுரைகள்....
ஒன்றாகி, ஒன்றுக்குள் ஒன்றாகிப் பெரிதாகி ,பல்வடிவாகி ,
கைகோர்த்து எங்கோ மெதுவாய்ப் பயணமாகி ஓயாத உள்--
வெளி இயக்கமாகி ,பிய்ந்த பஞ்சாகி ,அந்தரத்தில் அழகாய் நீந்தி நீந்தி ,
ஓய்வெங்கே புரியாததாகி
மனித மனத்து அனைத்து குணங்களும் கொண்டதாகி ,மௌனமாய் ,
அப்பாவியாய் , கவிதையாய் , ஓவியமாய் ,எண்ணிறந்த பறவைகள்போல்
...
எங்கே இவற்றின் ஜனனம் ,பயணம் , மரணம் ? .
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment