என்னை மதம் மாற்ற யாரும் தெரு முனைகளுக்கு அதிகாலை வாய்க்குழல் எடுத்து இருளைக் கிழித்து தம் மதமே உயர்ந்தது என்று ஓலங்கள் இட வேண்டாம் .
எனக்குத் தெரியும் என் மதம் என்னை எந்த ஒரு இடர்ப்படுத்தவில்லை .
என் மதத்திலும் உன் மதத்தைவிட நல்ல போதனைகள் உண்டு ;
உன் மதத்தைப் போலவே என் மதத்திலும் தீயோர் சதிகள் உண்டு.
என் மதம் என்னை எந்தக் கட்டாயத்துள்ளும் உட்படுத்தவில்லை.
என் மதத்தையே புரிந்துகொள்ள இயலாதவனுக்கு உன் மதத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் ?
என் மதம் எனக்கு சர்வ சுதந்திரம் அளித்துள்ளது .
என் மதம் கடவுளையே திட்ட எனக்கு உரிமை அளித்துள்ளது ;மறுக்க குறுக்கே நின்றதும் இல்லை.
என் புனிதம் மதங்களில் இல்லை .
என் மனதில் தான் உள்ளது .
எனவே உங்கள் குழல் வைத்தியங்களை நிறுத்திக் கொள்ளுங்கள் .
உங்கள் மனங்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போய்விடுங்கள் .
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment