Sunday, July 1, 2012

நிலப்பரப்பு விடாது ' நீர் தா..நீர் தா ' என்று
நீலக் கடலைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது ;
கடலோ ' மாட்டேன் ...மாட்டேன் ' என்று
ஓயாது மறுக்கிறது ; திமிராய் நிலத்தை அறைகிறது--
சூரியன் காதில் இந்தத் தீராத ஓலம் தெளிவாய் விழுகிறது ;
கடலினுள் தன் பலகோடிக் கரங்களை நுழைக்கிறது ;
ஈரத்தை அள்ளி உயரமாய் மேகமாய் மாற்றுகிறது ;
நிலத்தின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பி வைக்கிறது ;
காற்றைக் காதல் மொழியச் சொல்லி
நீர்மலர்களை நிலமெங்கும் சொரிய வைக்கிறது ;
நிலம் மறுநாள் மென்பச்சையாய்ப் புன்னகைக்கிறது ;
கடலோ இப்போது ' நதியே வா...நதியே வா ' என மாற்றி இசைக்கிறது !
-------சந்திர கலாதர்
[ 01.07.2012/ ஞாயிறு

No comments:

Post a Comment