வாக்குவாதங்களால் கொள்கை விடாப்பிடிகளால் வார்த்தை மோதல்களில் மனக் காயம் பெற்றவர்கள் உடன்பாடு முயற்சிகளின்போது 'அவன் ஏன் அதைச் சொன்னான் ?..இவள் ஏன் அதைச் சொன்னாள் ?' என்பதாக குலைத்துக்கொள்கையில் ஒன்றை நினைக்க வேண்டாமா ?
கரண்டியில் எண்ணெய் காய்ச்சித் தாளிக்கையில் நெருப்பின் வேகத்தில் கடுகு சில எல்லை தாண்டிக் குதித்து வெளியே விழும்தானே !
சினம் கொழுந்து விட்டு எரிகையில் எந்தச் சொல் எப்படி எங்கே வாயிலிருந்து தெறித்து வீழும் என்று எவரால்தான் சொல்லமுடியும் ?
கீழே வீழ்ந்து நாசமான பொரிந்த கடுகைத் தேடித் தேடி வாழ்க்கையை நாசம் செய்யப் போகிறீர்களா
அல்லது இதயத்துக்கு உள்ளேயே மறைந்து இருக்கும் அன்பைப் பேணி வாழ்க்கைப் பாதையில் முன் செல்லப் போகிறீர்களா ?
[ பல டிவி நிகழ்ச்சிகளின் பாதிப்பில் ]
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment