சூரியனே !
இது வசந்த காலம் !
கனவுகள் கைகோர்க்கும் காலம் அல்லவா ?
காலைகள் ஏன் பூத்ததும் வதங்கிப் போகின்றன ?
சற்று மென்மை கூட்டி மேன்மை சேர்க்கலாகாதா ?
எத்தகைய ' வில்லத்தனச் ' சிரிப்புகளும் இல்லாது
மௌனமாய்ச் ' சவுக்கடி' த்து
மேனியில் ஏன் சிவப்பு ' சிற்றாறு 'களை வரைகிறாய் ;
உப்பு நதிகளை உயிர்ப்பிக்கிறாய் , சொல் ?
இளங்காற்றைக் கொன்று போடுகிறாய் ?
காற்றில்லாக் காலை கழுத்தை நெரிக்கிறதே !
சுவர் நிழலில் தஞ்சம் புகினும்
வான் ஏறி நிழல் தின்று எனைக் கடிக்கிறாயே !
போ , வசந்த கால மாலைக்கே என் ' வாக்கு ' !
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment