இறைவா...ஆ..ஆ..ஆ !
உன் காது செவிடானால் இப்போதாவது கேட்கிறதா ?
அவளைப் பேசச் சொல்;
என்னால் முடியவில்லை-
உன்னால் முடியுமா சர்வ வல்லமையாளனே ?
இறைவா !
நீ எங்கும் இருப்பவனாம் ;
அதனால் கிசுகிசுக்கிறேன்;
அவளைப் பேசச் சொல் !
இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் மோகிப்பாள் ?
மௌனம் கொல்லுமோ ?
கொல்லும் கொல்லும்தான் -
பாவம் ,அவள் தன்னிலை அறியாதவள் ;
அவளுக்கென்றே மாறாத உலகம் ;
அவள் விழிகளை உள்வாங்கிய உலகம் --
இந்த வண்ண பூமிக்கு அழைத்து வா !
விழி வண்டுகளை மண்ணின் வியப்புகளில் சுழலச் செய்.
வயிற்றின் பசி காட்டு ;
ருசியின் வழி சொல்லு.
நின்ற காலத்தை முடுக்கிவிடு ;
எதிர் காலத்தை இழுத்து முன் நிறுத்து -
ஆம் , அவள் வேண்டும் ;
மறுபடி வாழ வேண்டும் .
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment