Tuesday, January 1, 2013

காற்றே நீ தான் ...!


 &

நிலம் நீரால் துண்டிக்கபடுகிறது
...
காற்றே நீதான்

எவற்றாலும் துண்டிக்கப் படவில்லை

உலகெங்கும் வானெங்கும்

எப்போதும் சுற்றித் திரிகிறாய் -

உன்னை நான் என்னுள் உயிர்க்கையில்

எங்கோ என்னவளின் உள்ளிழுப்பே

நெஞ்செல்லாம் நிறைக்கிறது-

அவளைத் தொட்ட நீயே

இதோ என்னையும் தழுவுகிறாய் -

அவள் மொழிகளைக் காதில்

காதலாய்க் கிசுகிசுக்கிறாய் --

ஒரு கரம் என் மீதும்

மறு கரம் அவள் மீதுமாய்

ஆதரவாய்ப் படர்கிறாய் --

அவள் உணர்வின் நறுமணம்

உன் சிறகில் எனை நிரப்புகிறது -

உன் மெல்லிய நரம்பிழைகளிலும்

அவளுக்காக இசை வருடுகிறேன்--

என் நெஞ்சு கனவுகளால் கனக்கிறதே

அவளிடம் உன்னால் சுமக்கக் கூடுமா ?

காற்றே உன்னைகூட இன்று

உருவாய்ப் பார்க்க முடிகிறதே -

அவள் பார்வை ஒளி படர்ந்து

நீ சந்திர காந்தம் பெறுகிறாயே !

---சந்திர கலாதர்

02.01.2013 / புதன் / மார்கழி 18

காலை 9.30 மணி

No comments:

Post a Comment