சிறு புல்லாய்ச் சிரிப்பதில் என்ன சுகம் ?
சிறு புள்ளாய்ப் பறப்பதில் என்ன சுகம் ?
ஒரு கூழாங்கல்லாய் நீரோடைதனில்
மயங்கிக் கிடப்பதில் யாது சுகம் ?
பெருமலையாய் நீல வடிவெடுத்து
வான் முட்டிக் கிடப்பதில் யாது சுகம் ?
மணல் சரிவில் அலையாய்ச் சிரித்தேறி
புன்னகைப் பூச்சறுக்கலில் என்ன சு கம் ?
ஒரு குட்டிக் காற்றாய் ஓடி வந்து
இலைகளிடைத் திரிவதில் யாது சுகம் ?
ஒரு புகழும் வேண்டேன் பெயர் வேண்டேன் ;
இந்த சுகங்கள் என்றும் எனைச் சேரின்
அதுவே போதும் மனம் நிறைவேன் !
-----------சந்திர கலாதர்
No comments:
Post a Comment